Arththaviyal அர்த்தவியல்

Arththaviyal அர்த்தவியல்

By Tiruchirappalli Sivashanmugam

Subjects: arttaviyal, Tamil movies, arthaviyal, Tamil Learning, Tamil Book, Sivashanmugam, Tamil Literature, Tamil stories, Tamil Lingustics, ardhdhaviyal, ariviyal, semantics, Tamil Grammar, Indic languages, arththam, Tamil Semantics, Scientific Tamil, Tiruchchirappalli, ardhaviyal, Tamil, Tamil semiotics, stars, Tamil philosophy, Latest, ardham, Learn Tamil

Description: அர்த்தவியல் அட்டவணைப்படுத்தும் ஏழுவிதமான சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகள் உனக்கு தெளிவாகத் தெரியும்வரை உன் அறிவு தெளிவற்றதாகவே இருக்கும். எதையும் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைக்கவோ, புரிந்துகொள்ளவோ உன்னால் முடியாது. சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக நீ அறிந்திருந்தால்தான் எக்கருத்தையும் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைக்கவும், புரிந்துகொள்ளவும், கல்வி கேள்விகளில் சிறக்கவும் முடியும். எக்கருத்தையும் குழப்பமில்லாமல் தெளிவாக எடுத்துரைப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், கல்வி கேள்விகளில் சிறப்பதற்கும் முதற்படி சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளை நீ அறிந்துகொள்வதுதான். முதலில், அர்த்தவியல் அட்டவணைப்படுத்தும் சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைக் கண்டால் மட்டுமே உன் அறிவில் தெளிவு பிறக்கும். உன் கருத்தை, உன் எண்ணத்தை தெளிவாகக் குழப்பமில்லாமல் உலகிற்கு எடுத்துரைக்க விரும்பினால், மற்றவர்களின் கருத்துகளை தெளிவாகக் குழப்பமில்லாமல் புரிந்துகொள்ள விரும்பினால், கல்வி கேள்விகளில் நீ சிறக்க விரும்பினால் அர்த்தவியல் அட்டவணைப்படுத்தும் சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட கற்றுக்கொள். சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளைக்கூட அறியாமல் சொற்களை எழுதிவைத்து வாசிப்பதாலும், மற்றவர்கள் எழுதிவைத்ததை அப்படியே மனப்பாடம் செய்து அடிபிறழாமல் திரும்பவும் மற்றவர்களிடம் சொல்வதாலும் உன் அறிவில் எவ்விதத் தெளிவும் ஏற்படப்போவதில்லை. அர்த்தவியல் அட்டவணைப்படுத்தும் சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளை உன்னால் காணமுடியாவிட்டால், உலகில் உலாவரும் ஆசிரியர்களிடம், பேராசிரியர்களிடம், சிந்தனையாளர்களிடம், எழுத்தாளர்களிடம், ஞானிகளிடம், விஞ்ஞானிகளிடம், கவிஞர்களிடம், மேதைகளிடம், பேச்சாளர்களிடம், தலைவர்களிடம், மதியூக மந்திரிகளிடம் சொற்களுக்கிடையே அர்த்த ரீதியாக உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்ட சொல்லித் தெரிந்துகொள். அறிவில் தெளிவின்மை உன் தோல்விக்கு வழிவகுக்கும்.

Comments

You must log in to leave comments.

Ratings

Latest ratings